Friday, August 22, 2008
சுதந்திரம் இழந்த சுதந்திர தினம்
தேசத் தந்தை காந்தியடிகளிடம் சுதந்திரம் என்றால் என்ன? என்று வினா எழுப்பிய போது, ஓர் இளம் பெண் நிறைய நகைகளை அணிந்து கொண்டு, நள்ளிரவில் இந்நாட்டின் தெருக்களில் பயமின்றி நடமாடக் கூடிய நிலைக்குப் பெயர்தான் சுதந்திரம் என்று சொன்னார்.
இப்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கும் காந்தியடிகள் சொன்ன சுதந்திரத்திற்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன என்பதை தேசம் எண்ணிப் பார்க்க வேண்டும். 61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களின் நடமாடும் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
குண்டு மனிதர்கள் வீதியில் உலாவரலாம் மனித குண்டுகள் தெருக்களில் சுற்றுவதாக வதந்தி பரப்பி னால், என்ன ஆகும். தூங்கும் சுதந்திரம் கூட தூக்கில் போடப்பட்டு விட்டது.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்த வீரத் தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணி காத்து பெரும் வல்லரசாய் நாட்டை உருவாக்க உறுதி பூண்டு இதய எழுச்சி யுடனும், மன மகிழ்ச்சியுடனும், முக மலர்ச்சியுடனும் கொண்டாடப்பட வேண்டிய சுதந்திரதினம் பயத்துட னும், பதற்றத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும், மக்களை ஆக்குவது வேதனைக்குரியது.
இதற்குத் தானா நமது விடுதலை வீரர்கள் இன்பங்களைத் துறந்தார்கள்? இன்னுயிரை ஈத்தார்கள்? ஆங்கிலேயரின் கொடிய சிறைகளில், தம் இனிய இளமையைப் பலியிட்ட நம் முன்னோர்கள், தங்களுக்குக் கிடைக்காத உரிமைகளும், நிம்மதியான வாழ்வும், தங்கள் சந்ததிகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த இலட்சியப் போரில் தங்கள் ஓருயிரையும் தந்தார்கள்.
நம் நாட்டின் சூழல், எஞ்சியிருக்கும் விடுதலைப் போராளிகளின் நிம்மதியையும் பறித்திருக்கிறது.
விடுதலைக்குப் பிறகு தேனாறும், பாலாறும், தெருதோறும் ஓடும் என்றார்கள். குறைந்த பட்சம் ரத்த ஆறு ஓடாமல் இருந்தால், நிம்மதியாக இருக்கும்.
விடுதலைக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? பல்வேறு துறைகளில் இலட்சிய உயரங்களை எட்டி இருக்கிறோம். அது பாராட்டுக் குரியது. அதே நேரம் வன்முறையின் வளர்ச்சி வேதனைக்குரியது.
அண்ணல் காந்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தி இயந்திரத் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் சிதறடிக்கப்பட்டார். அப்பாவி மக்களை சதிகாரக் குண்டுகள் சாகடித்துக் கொண்டி ருக்கின்றன.
உண்மையான பயங்கரவாதிகளையும், பயங்கர வாதத்தின் வேரையும் கண்டறிந்து, அடியோடு களையெடுக்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் விருப்பம். ஆனால், பயங்கரவாதப் பழிகளை ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் மீதே சுமத்த வேண்டும் என்பது ஆதிக்க மதவெறியர்களுக்கும், அவர்களின் ஆயுதங்களாய் மாறிப்போன ஊடகங்களுக்கும் ஒரே நோக்கமாக உள்ளது.
நாட்டிற்காக தியாகம் செய்த ஒரு சமுதாயத்தை தேசத் துரோகிகளாக சித்தரிக்கும் கொடுமை எந்த நாட்டிலும் இல்லை.
சுதந்திரத்தைப் பற்றி
''நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை''
என்று எழுதினார் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முன்னாள் மாணவர் அரங்கநாதன்.
அவன்
ஒரு பட்டு வேட்டி பற்றிய
கனாவில் இருந்த போது
கட்டி இருந்த கோவணமும்
களவாடப் பட்டது.
என்ன தந்தது இந்த சுதந்திரம்.
அப்பனின் திருவோட்டை
புத்திரனுக்கு இது
புதுப்பித்துத் தந்தது''
லி என்கிறார் வைரமுத்து.
அண்ணல் காந்தியே!
நீ எங்கள் கையில்
அட்சயப் பாத்திரத்தைத்
தந்து சென்றாய்,
இப்போது எம் கையில்
இருப்பதோ பிச்சைப் பாத்திரம்'
இந்த மாற்றத்தை செய்த மந்திரவாதிகள் யார்?
தேசத் தந்தையே,
உனக்கு சேரிகள் பிடிக்குமென்பதால் தானா
தேசத்தையே சேரியாக்கி விட்டார்கள்,
லி என்று கொதிக்கிறார்லிமு.மேத்தா...
நாட்டில் பற்று வைப்பவர்களை விட
நாட்டைப் பற்ற வைப்பவர்கள்
நம் தலைவர்கள், - என்பது புதியவனின் குமுறல்,
சுதந்திரம் என்பது வெறும் சொல்லல்ல. அது ஓர் உன்னத இலட்சியம். தேசம் என்பது, மண்ணும், மலையும், கடலும், நதியும், காடும், மேடும் மட்டுமல்ல..
தேசம் என்றால் மக்கள். தேசப் பற்று என்றால், மக்களின் மீது கொள்ளும் அன்பு.

இந்திய அமெரிக்க அணுசக்தி
இந்திய அமெரிக்க அணுசக்திசூழ்ச்சி- துரோகம்- அடிமைத்தனம்
எம்.தமிமுன் அன்சாரி
(இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து மேலும் விபரம் அறிய துடிப்பவர்களுக்காக இக்கட்டுரை துணுக்குகளாக தரப்படுகிறது.)
அணு சக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1963லில் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்காக இந்தியாலிஅமெரிக்கா வோடு ஏற்கனவே செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய 'ஹைடு' சட்டம் இல்லை. ஆனால் இப்போதைய ஒப்பந்தத்தில் 'ஹைடு' சட்டம் சேர்க்கப் பட்டதுதான் சிக்கல்களுக்கு காரணம்.
ஒப்பந்தம் என்றால் இருதரப்பும் சேர்ந்து திட்டமிட்டு ஆலோசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த 'ஹைடு' ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்க அதிகாரிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பு மதிக்கப்படவேயில்லை. கேட்கப்படவும் இல்லை.
அமெரிக்காவின் 'ஹைடு' சட்டத்தின்படி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியா வின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமெரிக்காவுக்கு எதிராக இல்லை என ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதிலிஅமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமாம். அமெரிக்காவின் தவறு களை இந்தியா எதிர்த்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும்!
அமெரிக்க கடற்படை சர்வதேச கடல் எல்லைகளில், தனக்கு பிடிக்காத நாடுகளின் கப்பலை தாக்கினால், இந்தியா வும் அதற்கு உதவ வேண்டும். அமெரிக்கா, ஈரான், வடகொரியா, க்யூபா போன்ற தனக்கு பிடிக்காத நாடுகளை தாக்கினால், அதற்கு துணையாக இந்தியாவும் தனது படையை அனுப்பி அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத் திற்கு துணை போக வேண்டுமாம்! இது சுற்றி வளைத்து கூறப்பட்டுள்ளது.
இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், ஈரானை அமெரிக்கா தாக்கினாலும், மிரட்டினாலும் அனைத்து விவகாரத்திற்கும் இந்தியா மறு பேச்சு பேசாமல் தனது ஒத்துழைப்பை (?) தர வேண்டுமாம். இதற்கும் அணு ஒப்பந்தத் திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.
அமெரிக்கா இந்தியாவோடு ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட விரும்பினால், அது என்ன துறை சார்ந்த ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியா உடனடியாக தலையாட்டி மறுவார்த்தை பேசாமல் கையெழுத்து போட வேண்டுமாம்!
இந்தியா முன்பு போல் அணு குண்டு சோதனைகளை தற்காப்புக்காக மறந்தும் நடத்திட கூடாது. அப்படி அத்துமீறி செயல்பட்டால் ஒப்பந்தப்படி அமெரிக்காவிடம் பெற்ற அணு உலை கள், இயந்திரங்கள், மறு சுழற்சி செய்த அணுப் பொருட்கள் ஆகியவற்றை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொள்ளு மாம்! அதாவது 10 லட்சம் கோடி இந்திய பணத்தில் தயாரான அணு சக்தி திட்டங்களை அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் இழுத்து மூடி விட முடியும்!
அமெரிக்கா நினைத்தால் ஒப்பந் தத்தை நினைத்த நேரத்தில் முறிக்க முடியும். ஆனால் இந்தியா ஒப்பந்தத்தை முறிக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமாம்.
நாம் இப்போது தயாரிக்கும் மின்சாரத்தை விட, அமெரிக்க ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு இரு மடங்கு கூடுதல் செலவாகும். அதுவும் 2020லிஆம் ஆண்டுதான் உற்பத்தி தொடங்குமாம்!
தற்போது இந்தியாவில் 3% மின் தேவைகள் மட்டுமே அணு உலைகள் மூலம் பெறப்படுகிறது. மீதி 97% மின்தேவைகள் நிலக்கரி, காற்றாலை, சூரிய வெப்பம், அருவி, கடல் என இயற் கையை பயன்படுத்தியே பெறப்படுகிறது.
இப்போது அமெரிக்க ஒப்பந்தம் மூலம் போடப்படும் அணு உலைகள் மூலம் 2020லிஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் வரைதான் மின் உற்பத்தி பெறமுடியுமாம்! ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள வசதிகளை பயன் படுத்தி 2040லிஆம் ஆண்டில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இப்போது நம்மிடம் இருக்கும் எரிவாயு நிலையங்களும், அணு மின் நிலையங் களும், அனல் மின் நிலையங்களும் போதுமானவை.
அமெரிக்காவிடம் தான் யுரேனி யம் பெற முடியும் என்ற நிலையில் இந்தியா இல்லை. ஜார்கண்ட், ஆந்திரா, மேகலயாவில் யுரேனிய தாதுக்கள் குவிந்து கிடக்கின்றன. உலக அளவில் கேரளாவில் மட்டும் 34% அளவுக்கு அணுவுக்கு தேவையான தோரியம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு இதனை தோண்டி பயன்படுத்தா மல் இந்தியாவிடம் எதுவுமில்லாதது போலவும், அமெரிக்காவிடம் தான் அது இருப்பது போலவும் நாடகம் போடுகிறது.
ஒருவேளை இந்தியாவுக்கு எதிர்காலத்தில் கூடுதல் மின்தேவையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆபத்துக்கள் இல்லாத காற்றாலை, கடல், அலை, அருவி ஆகியவற்றை நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அப்துல் கலாம் ஐயரை தவிர, மற்ற இந்திய விஞ்ஞானி கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா 1979லிக்கு பிறகு தனது நாட்டில் அணு உலைகளை நிறுவவில்லை. ஆனால் இந்தியாவில் நிறுவத் துடிக்க காரணம். இதனால் பல அமெரிக்க தொழிலதிபர்களின் 'நலன் களும்' இந்திய அரசியல்வாதிகளின் 'நலன்களும்' அடங்கியுள்ளன.
இந்திய அணு உலைகள் மொத்தம் 22. அதில் 4 உலைகள் மட்டுமே சர்வதேச கண்காணிப்பில் இருக் கின்றன. அமெரிக்காவுடன் 'ஹைடு' ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட் டால் இனி கூடுதலாக 14 அனு உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.இதை மக்களிடம் வெளிக்காட்டாமலும், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்காமலும் ரகசியம் காக்கப்படுவதும், இது பற்றிய விபரங்களை இந்தியர் களிடம் சொல்லாமல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஒப்பந்தம் போட துடிப்பதும்தான் புரியாத புதிராக உள்ளது.மொத்தத்தில் நேருவின் சீரிய சர்வதேச ராஜதந்திரம், இந்திரா காந்தி யின் துணிச்சல், ராஜீவ் காந்தியின் சுய சார்பு ஆகியவற்றை குழி தோண்டி புதைக்கத் துடிக்கும் காங்கிரஸ் கம் பெனியை வரலாறு மன்னிக்காது.

Subscribe to:
Posts (Atom)